இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 6

இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு

மார்ச் 6 : ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் 2வது இறுதி ஆட்டத்தில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை ஆஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ளது.
முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வார்னர் 140 பந்துகளில் 4 பவுண்டரிகளுடனும், 1 சிக்சருடனும் 100 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணை சேர்ந்து விளையாடிய அணித் தலைவர் கிளார்க், தனது பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினார். வெறும் 91 பந்துகளில் 4 சிக்சர்களுடனும், 5 பவுண்டரிகளுடனும் 117 ரன்களை எடுத்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு அடுத்து வந்த வீரர்கள் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதைத் தொடர்ந்து 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 271 ரன்களை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here