ஜெருசலேம், பிப். 16: இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகம் உள்ளன. எனவே இந்தியா மிகுந்த விழிப்புணர்வுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் யூஸி லன்தாவ். மூத்த அமைச்சரான இவர் அடுத்த வாரத்தில் 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இந்நிலையில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, இந்தியாவில் ஏற்கெனவே பலமுறை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளன. இப்போது அங்குள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இது இந்தியாவில் பயங்கரவாதிகள் மிகவும் வேகமாகச் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பயங்கரவாதிகளை எதிர்கொள்வது என்பது இஸ்ரேலுக்கோ, இந்தியாவுக்கோ புதிய விஷயம் அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நாம் மேலும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துபவை. நாட்டின் ஜனநாயகம், நாகரிகம், மக்களின் அமைதியான வாழ்க்கை என அனைத்துக்கும் எதிரான காட்டுமிராண்டித்தனம்தான் பயங்கரவாதம் என்றார்.