பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, February 13

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி


அடிலெய்டு, பிப்.12: முத்தரப்புத் தொடரின் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.
 பரபரப்பான கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனியின் அதிரடியால் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா வெற்றி கண்டது. கம்பீர் 111 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் எடுத்தார்.
 ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
 சச்சினுக்கு ஓய்வு: இந்திய அணியில் சச்சின், பிரவீண் குமார் ஆகியோருக்குப் பதிலாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத கம்பீர், உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
 டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் வார்னரும், பாண்டிங்கும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ûஸத் தொடங்கினர். வினய் குமார் வீசிய 4-வது ஓவரில் பாண்டிங் 6 ரன்களில் நடையைக் கட்டினார். 24 பந்துகளைச் சந்தித்த டேவிட் வார்னர் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார். கேப்டன் கிளார்க் 43 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
 ஃபோரஸ்ட் அரை சதம்: இதையடுத்து அறிமுக வீரர் ஃபோரஸ்டும், டேவிட் ஹசியும் ஜோடி சேர்ந்தனர். 71 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார் ஃபோரஸ்ட். 83 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபோரஸ்ட்-ஹசி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது.
 இதையடுத்து கிறிஸ்டியான் களம் கண்டார். மறுமுனையில் டேவிட் ஹசி 54 பந்துகளில் அரை சதமடித்தார். அவர் 76 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து வெளியேறினார். கிறிஸ்டியான் 39 ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்தது.
 இந்தியத் தரப்பில் வினய் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 கம்பீர் 92: 270 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இந்திய அணியில் சேவாக் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கோலி 18 ரன்கள் எடுத்திருந்தபோது கிளின்ட் மெக்கே வீசிய பந்தை சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் எல்லைக் கோட்டில் நின்ற ஃபோரஸ்ட் அற்புதமாக கேட்ச் செய்தார்.
 இதையடுத்து கம்பீருடன் ஜோடி சேர்ந்தார் ரோஹித் சர்மா.
 மெக்கே வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த அரை சதம் கடந்தார் கம்பீர். 63 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் கம்பீர் அரைசதம் அடித்தார். நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 33 ரன்களில் வீழ்ந்தார். ரோஹித் - கம்பீர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் கம்பீர்.
 ரெய்னா அதிரடி: பின்னர் ரெய்னாவுடன் இணைந்தார் தோனி. ரெய்னா வேகமாக ஆடியபோதும், தோனி ஆமை வேகத்திலேயே ஆடினார். 30 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். கடைசி 3 ஓவர்களில் 27 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், தோனி தொடர்ந்து பந்துகளை வீணடித்தார்.
 மறுமுனையில் சற்றுவேகம் காட்டிய ஜடேஜா, சிக்ஸருக்கு தூக்கி 12 ரன்களில் வீழ்ந்தார். இதனால் 49-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன.
 பரபரப்பான கடைசி ஓவர்: கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிளின்ட் மெக்கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்கத் தவறிய அஸ்வின், 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் 3-வது பந்தை எதிர்கொண்ட தோனி, சிக்ஸர் அடித்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
 அடுத்த பந்தையும் தோனி சிக்ஸருக்கு தூக்க, அது எல்லைக் கோட்டில் கேட்ச் ஆனது. ஆனால் அந்த பந்து நோ-பால் ஆனதால் ஒரு ரன் கிடைத்தது. மேலும் 2 ரன்களை தோனி ஓடி எடுத்தார்.
 இதனால் இந்தியாவுக்கு 3 ரன்கள் கிடைத்தன. அடுத்த பந்தில் தோனி மேலும் 3 ரன்கள் எடுக்க இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
 தோனி 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 1 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்தார்.
 கம்பீர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் இந்திய அணி பெற்றுள்ள 2-வது வெற்றி இது. முன்னதாக 2-வது ஆட்டத்தில் இலங்கைய வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
 
 ஸ்கோர் போர்டு
 ஆஸ்திரேலியா
 டேவிட் வார்னர் ரன் அவுட் (ரோஹித்/வினய்) 18 (24)
 ரிக்கி பாண்டிங் (சி) கோலி (பி) வினய் குமார் 6 (14)
 மைக்கேல் கிளார்க் (பி) உமேஷ் யாதவ் 38 (43)
 பீட்டர் ஃபோரஸ்ட் (சி) வினய் (பி) உமேஷ் 66 (83)
 டேவிட் ஹசி (சி) சேவாக் (பி) ஜாகீர் கான் 72 (76)
 டேனியல் கிறிஸ்டியான் ரன் அவுட் (ஜடேஜா/தோனி) 39 (36)
 மேத்யூ வேட் (பி) வினய் குமார் 16 (18)
 ரியான் ஹாரிஸ் நாட் அவுட் 2 (4)
 கிளின் மெக்கே ரன் அவுட் (தோனி/வினய்) 3 (3)
 உதிரிகள் 9
 மொத்தம் ( 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு) 269
 விக்கெட் வீழ்ச்சி: 1-14 (பாண்டிங்), 2-53 (வார்னர்),
 3-81 (கிளார்க்), 4-179 (ஃபோரஸ்ட்), 5-235 (ஹசி),
 6-254 (கிறிஸ்டியான்), 7-265 (வேட்), 8-269 (மெக்கே).
 பந்துவீச்சு
 ஜாகீர் கான் 10-0-46-1
 வினய் குமார் 10-1-58-2
 ரவீந்திர ஜடேஜா 10-0-50-0
 உமேஷ் யாதவ் 10-1-49-2
 அஸ்வின் 8-0-47-0
 ரோஹித் சர்மா 2-0-15-0
 இந்தியா
 கெüதம் கம்பீர் எல்பிடபிள்யூ (பி) மெக்கே 92 (111)
 வீரேந்திர சேவாக் (சி) ஹசி (பி) மெக்கே 20 (21)
 விராட் கோலி (சி) ஃபோரஸ்ட் (பி) மெக்கே 18 (28)
 ரோஹித் சர்மா (சி) ஸ்டார்க் (பி) ஹாரிஸ் 33 (41)
 சுரேஷ் ரெய்னா (பி) டோஹெர்டி 38 (30)
 தோனி நாட் அவுட் 44 (58)
 ரவீந்திர ஜடேஜா (சி) பாண்டிங் (பி) டோஹெர்டி 12 (8)
 அஸ்வின் நாட் அவுட் 1 (2)
 உதிரிகள் 12
 மொத்தம் (49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 270
 விக்கெட் வீழ்ச்சி: 1-52 (சேவாக்), 2-90 (கோலி),3-166 (ரோஹித்),
 4-178 (கம்பீர்), 5-239 (ரெய்னா), 6-257 (ஜடேஜா).
 பந்துவீச்சு
 ஹாரிஸ் 10-0-57-1
 ஸ்டார்க் 8-0-49-0
 மெக்கே 9.4-1-53-3
 கிறிஸ்டியான் 10-0-45-0
 டேவிட் ஹசி 3-0-13-0
 டோஹெர்டி 9-0-51-2
 கம்பீருக்கு தவறான அவுட்
 கம்பீர் 92 ரன்கள் எடுத்திருந்தபோது மெக்கே பந்துவீச்சில் எல்டபிள்யூ முறையில் அவுட் ஆனார். ஆனால் டி.வி. ரீபிளேயில் பார்த்தபோது பந்து லெக் ஸ்டெம்புக்கு வெளியில் செல்வது தெரியவந்தது. நடுவரின் தவறான தீர்ப்பால் 8 ரன்களில் சதத்தை நழுவவிட்டார் கம்பீர்.
 கம்பீர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 5-வது அரைசதம் இது. சர்வதேச அளவில் அவருடைய 29-வது அரைசதம் இது. அடிலெய்டில் கம்பீர் அடித்த 92 ரன்கள்தான் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன்னர் 1986-ல் கவாஸ்கர் அடித்த 77 ரன்களே இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
 
 அடிலெய்டில் முதல் வெற்றி
 அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 அறிமுக அரை சதம்
 ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஃபோரஸ்ட் இந்தியாவுக்கு எதிராக அறிமுக வீரராக களம் கண்டார். முன்னணி வீரர்கள் விரைவாக வெளியேறியபோதும் அபாரமாக ஆடி அரை சதமடித்தார். இதன்மூலம் அறிமுக ஆட்டத்தில் அரை சதமடித்த 11-வது ஆஸ்திரேலியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
 மிகப்பெரிய சேஸ்
 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றிதான் (270) ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய சேஸிங் வெற்றி. இதற்கு முன் 1986-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 263 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றதே பெரிய சேஸ் வெற்றியாக இருந்தது.
 சிட்னியில் 2008-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 242 ரன்கள் எடுத்து வெற்றி கண்டதே அந்த அணிக்கு எதிராகப் பெற்ற மிகப்பெரிய சேஸ் வெற்றியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here