அபுதாபியில் இறந்த நிலையில் பள்ளி பேருந்தில் 4 வயதுடைய இந்திய சிறுமியின் உடல் கண்டெடுப்பு ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, October 8

அபுதாபியில் இறந்த நிலையில் பள்ளி பேருந்தில் 4 வயதுடைய இந்திய சிறுமியின் உடல் கண்டெடுப்பு !



அபுதாபியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் நேற்று (07/10/2014) காலை வழக்கம் போல பள்ளி பேருந்தில் அனைத்து மாணவ , மாணவியர்களும் வந்தனர். பள்ளி வந்தடைந்ததும், அனைத்து மாணவர்களும் தங்கள் வகுப்புக்கு செல்வது வழக்கம். அதை உறுதிபடுத்தும் விதமாக பேருந்தின் ஓட்டுனரும் , assistant ம் பேருந்தில் குழந்தைகள் இல்லை என்பதை சோதனை செய்து NO STUDENTS INSIDE THE BUS என்ற போர்டை பேருந்தின் முன் வைப்பது வழக்கம்.



ஆனால் , நேற்று 4 வயதுடைய இந்திய சிறுமி பேருந்து காலை பள்ளியை வந்தடைந்தது அறியாமல் அயர்ந்து பள்ளி பேருந்திலே தூங்கி விட்டாள். வழக்கமாக சோதனை செய்யும் ஓட்டுனரும் ஒழுங்காக அவரின் வேலையை செய்யாமல் அனைத்து கண்ணாடிகளையும், கதவையும் அடைத்து விட்டு சென்றுவிட்டார். 



மதியம் பள்ளி முடிந்ததும் மற்ற மாணவியர் பேருந்தில் ஏறியதும் இந்த சிறுமி பேச்சு , மூச்சு இல்லாமல் இருந்ததை பார்த்து , அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தபோது ஏற்கனவே சிறுமி பேருந்திலேயே இறந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

எவ்வளவு ஒரு சோகமான செய்தி !!! சிறுமியை இழந்து வாடும் அந்த இந்திய குடும்பதிற்கு நமது முத்துபேட்டை பிபிசி சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here