முத்துப்பேட்டையில் போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது - BBC

BBC

Wednesday, September 10

முத்துப்பேட்டையில் போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது


செப்டம்பர் 10: முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (42), திருத்துறைபூண்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். இவர் முத்துப்பேட்டையில் உள்ள அவரது உறவினர் வீட்டு விஷேசத்திற்காக குடும்பத்துடன் வந்துள்ளார்.

இந்நிலையில் விஷேசம் நடைபெறும் திருமண மண்டபத்தில் தங்கி இருந்த அவர் இரவு செல்போன் பேசிக்கொண்டு மண்டபத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் சென்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர் தான் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த 3 பேரும் அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று மண்டபத்தில் இருந்து சிறிது தூரம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களில் 2 பேர் சந்திரசேகரனின் கை, கால்களை மடக்கி பிடித்து கொண்டனர். மற்றொருவர் செல்போனில் பேசினார். இதையடுத்து 20–க்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

அவர்கள் கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி, இரும்பு கம்பியால் குத்தியுள்ளனர். பின்னர் அந்த வழியாக ஆட்கள் வருவதைக்கண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்தார். தாக்கப்பட்ட சந்திரசேகரனின் சொந்த ஊர் முத்துப்பேட்டை என்பதால் முன்விரோதம் காரணமாக இவரை தாக்கி இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக நெய்யகார தெருவை சேர்ந்த அன்சாரி (42), ஆசாத் நகர் மீராஉசேன் (37), ரஹ்மத் நகர் கலில்ரகுமான் (27) ஆகியோரை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment