முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம். - BBC

BBC

Saturday, August 9

முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம்.











ஆகஸ்ட் 09: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு  முகாம்  புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 8.8.2014 வெள்ளி  அன்று  பிற்பக ல் 2  மணி  முதல்  5  மணி வரை  நடைபெற்றது. 

மேற்பார்வையாளர்  பொறுப்பு சூசைரத்தினம் அனைவரையும் வரவேற்றார். முகாமை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் மணி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன்  மாவட்ட  தொடக்கக் கல்வி அலுவலர் மாந்தரையன் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரகுராமன் லயன்ஸ்  கிளப் நிர்வாகிகள் திருவாளர்கள் தலைவர் சோமசுந்தரம்,  செயலர் அய்யப்பன், மாரிமுத்து சாமிநாதன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் சுல்தான் இப்ராஹீம் ஆகியோர் குத்துவிளகேற்றி தொடக்கி வைத்தனர்.

முகாமில் மன நல மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர் கண் மருத்துவர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு வருகை புரிந்து 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளை  மதிப்பீடு செய்து  உதவி  உபகரணங்கள்,  தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கினர்.

இம் முகாமில் ஆசிரியப் பயிற்றுனர்கள், 22 சிறப்பாசிரியர்கள் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சிலுவைச் சங்க ஒருங்கினைப்பாளர் செல்வ சிதம்பரம் மற்றும் 20 மாணவர்கள்  கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டி, மதிய  உணவு  ஆகியவை  வழங்கப்பட்டது.  முடிவில் வட்டார ஒருங்கினைப்பாளர் சுரேஷ் நன்றி கூற முகாம்  இனிதே  நிறைவுற்றது.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment