ரோஹிங்கியா முஸ்லிம்களின் பட்டினிப் பெருநாள்! - BBC

BBC

Saturday, August 2

ரோஹிங்கியா முஸ்லிம்களின் பட்டினிப் பெருநாள்!


ஆகஸ்ட் 02: 2012-ஆம் ஆண்டு மியான்மர் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரை துயரங்

களால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. புத்த தீவிரவாதிகள் நடத்திய கலவரத்தில் 1,40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களெல்லாம் இதர சமுதாயங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணிகளுக்கு சட்டச் சிக்கல்களை அரசே உருவாக்கி வன்முறையாளர்களின் பக்கம் நிற்கிறது. உலக உணவு திட்டத்தின் கீழ் கிடைக்கும் உணவுப் பொட்டலங்கள் மூலம் வேலையின்றி வாழும் பெரும்பாலான குடும்பத்தினருக்கு வாழ்க்கை ஓடுகிறது.

ஆனால், மருந்துகள் வாங்க பணம் இல்லாததால், இவ்வாறு கிடைக்கும் உணவு பொட்டலங்களை விற்று மருந்து வாங்குபவர்களும் உள்ளனர்.

கண்ணில் காணும் பொருட்களையெல்லாம் தீக்கிரையாக்கி, கையில் கிடைத்தவர்களையெல்லாம் படுகொலைச் செய்து புத்த தீவிரவாதிகள் சித்வி கிராமத்தில் கோரத் தாண்டவம் ஆடினர்.

கூட்டுப் படுகொலைகளை நேரில் கண்ட கிராமத்தின் வீதிகளில் காணப்படும் மவுனம் பயங்கரமானது. கலவரத்தில் உயிரிழந்த பதினான்கு பேரின் அடக்கஸ்தலங்களுக்கு அருகே பிரார்த்திப்போரின் உள்ளங்களில் இருந்து இதுவரை பீதி அகலவில்லை.

கலவரத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் உள்ளூர் மக்கள் ஈத் தினங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில்லை. பெருநாள் தினங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் வன்முறைகள் ஏற்படுமோ? என்ற பயமும் அம்மக்களுக்கு உள்ளது.

நிலைமைகள் மிகவும் பரிதாபகரமாக இருந்தாலும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மார்க்க ரீதியான காரியங்களை நிறைவேற்றுவதில் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். வழக்கம் போல பெருநாள் தொழுகை முகாமின் இருக்கும் வசதிகளை பயன்படுத்தி நடத்தியுள்ளனர்.

அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சிலர் சந்திக்கச் சென்றனர். எனினும் நிலைமை மோசமாகத்தான் உள்ளது.

முகாமில் தங்கியுள்ள வயது முதிர்ந்த பெண்களில் ஒருவரான மப்யா ஹாது 2011-ஆம் ஆண்டு பெருநாள் தினத்தில் சுத்கி என்ற இனிப்புப் பண்டத்தை விநியோகித்த சம்பவத்தை நினைவுக் கூர்ந்தார். அன்று தான் கடைசியாக இனிப்புப் பண்டத்தை சாப்பிட்டேன் என்று அவர் கூறும்போது குரல் கம்மியது.

தகவல்: நியூ இந்தியா

No comments:

Post a Comment