ஜுன் 16: முத்துப்பேட்டை அருகே சுற்றுலா பயணிகள் மற்றும் பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல் !
பொள்ளாச்சியை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 45 பயணிகள் ஆமினி பேருந்தில் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வழிபாட்டை முடித்துக்கொண்டு இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
நேற்று இரவு பேருந்து தம்பிக்கோட்டை பகுதியில் வந்துகொண்டிருக்கும் போது முக்கூட்டுசாலையோர உணவு விடுதியில் பேருந்தை நிறுத்தி டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பயணிகளிடம் வாய் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் வாய் தகராறு முற்றியதில் வாகனத்தின் கண்ணாடிகளை கட்டைகளால் தாக்கி நொறுக்கியுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்துள்ளது.
இதைதொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் வாகனத்தை தானாக ஓட்டிச்சென்று தாமரங்கோட்டை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லபாண்டியன தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்டு சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். சேதமடைந்த ஆம்னி பேருந்து அதிரை காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தகவல்: அதிரை நியூஸ்





No comments:
Post a Comment