"முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர்"
----------------
உருவாக்கம்
------------
பூக்களை ரசிக்கும் நாம் வேர்களை பார்ப்பதில்லை.அலைகளில் நிற்கும் நாம் ஆழ்கடலுக்குள் பயணிப்பதில்லை.வானுயர்ந்த கட்டிடங்களை நிமிர்ந்து பார்க்கும் நாம் அஸ்திவாரங்களை குனிந்து பார்ப்பதில்லை.இதுப்போலவே நம் முன்னோர்கள் நமக்காக பல விதைகளை விதைத்துள்ளார்கள். அவ்விதைகள் மரமாகி நமக்காக நிழல்களை தருகிறது.விதைத்த விரல்களை அறிய வேண்டியது ,நமது கடமை.அல்லது அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு தெரியப்படுத்துவதும் கடமைதான். வரலாறு தெரிந்த சமூகம்தான் முன்னோக்கிச் செல்லும் .நமது துரதிஷ்டம் வரலாறை அறிய பின்னோக்கி பயணிக்க வேண்டி இருக்கிறது. முத்துப்பேட்டையை சேர்ந்த இன்றைய தலைமுறையும் வரும் தலைமுறைகளும் அறியவே இப்பதிவு.
முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர்.
------------------------------
நமது முன்னோர்களான தமிழக முஸ்லிம்கள் "திரைகடலோடியும் திரவியம் தேடு"எனும் வார்த்தைக்கு ஒப்ப கடல் கடந்து வணிகங்களில் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள். இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு, தமிழக முஸ்லிம்கள் பயணம் மேற்கொண்டதை வரலாறுகளில் அறிய முடிகிறது. அதில் ஒரு பகுதியாக நமது முத்துப்பேட்டையைச்சேர்ந்த நம் முன்னோர்களும் சிங்கப்பூர் சென்று வணிகத்தில் ஈடுப்பட்டும் உள்ளார்கள். வணிகம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் பிறந்த நாட்டிற்கும், புலம்பெயர்ந்த நாட்டிற்கும் ஏதாவது வகையில் உதவ வேண்டும். அதற்கு ஒரு குழுமம் தேவையென்றும் ஆரம்பிக்கப்பட்டதுதான் "முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர்"ஆகும். அதன் வாயிலாக முத்துப்பேட்டையிலிருந்து வரும் நம் சொந்தங்களுக்கு ஒரு ஆதரவாகவும் இருந்துள்ளார்கள். எத்தனையோ பேர்களுக்கு உதவியாகவும் இருந்திருக்கிறார்கள். அத்தகைய பெருந்தகைகளை நாம் இனி அறிந்துக்கொள்வோம்.
பெருந்தகைகளின் விபரங்கள் -
---------------------------------
புகைப்படத்தில் அமர்ந்திருப்பவர்கள் ( இடதிலிருந்து வலம் )
1) (பட்டி)மர்ஹூம் முகைதீன் குப்பை .
பேட்டை ரோடு,
பிச்சை மரைக்கார் சந்து,
முத்துப்பேட்டை.
சிங்கபூரில் வியாபாரியாகவும்,ஹனிபா டெக்ஸ்டைல்ஸில் சில காலம் வேலையும் பார்த்துள்ளார் .
2)மர்ஹூம் ஜனாப் இப்றாஹீம்
சுபைதா இல்லம்.
P.m சந்து
முத்துப்பேட்டை ,
மௌளானா அபூபக்கர் அவர்களின் தகப்பனார்.
சிங்கபூரில் கணக்கராகவும்,மினி மார்ட்டும் வைத்திருந்துள்ளார்
3)மர்ஹூம் G.Aஅப்துல் காதர்.
அரபி தெரு
முத்துப்பேட்டை ,
சிங்கபூரில் ஏற்றமதி,இறக்குமதியாளராக வலம் வந்தவர்.
இவரது குடும்பத்தினர் தற்போது சிங்கபூரில்தான் வசிக்கிறார்கள் .
நின்றுக்கொண்டிருப்பவர்கள் ( வலதுப்புறத்திலிருந்து இடம் )
4)மர்ஹூம். ஜனாப் சேகனா ,
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ஜகுபர் சாதிக்கின் தகப்பனார் .
மார்க்கெட் தெரு ,
முத்துப்பேட்டை .
இவரது பிள்ளைகள் சிங்கபூரில்தான் வசிக்கிறார்கள் .
5)மர்ஹூம்.அப்துல் லத்தீப் ,
புதுப்பள்ளி சந்து எதிரில் ,
பட்டுக்கோட்டை ரோடு,
முத்துப்பேட்டை .
இவர் சிங்கபூரில் மரைக்கார்&சன்ஸ் ல்
மேலாளராக பணிப்புரிந்துள்ளார்.
6)V.A.H துல்கர்னை,
பேட்டை ரோடு,
குட்டியார் ஜும்மா பள்ளி எதிரில்,
முத்துப்பேட்டை ,
இவர் சிங்கபூரில் டெக்ஸ்டைல்ஸ் &சொவினியர் வியாபாரமும் செய்தவர்.
7)மர்ஹூம் அப்துல் மஜீத் ,
(ஹாஜா லெப்பை அவர்களது சகோதரர்)
தெற்கு தெரு ,
முத்துப்பேட்டை .
புகைப்படத்தில் இல்லாத மேலும் சில முக்கிய நபர்கள்
8) கொய்யா ஜனாப் அப்துல் ரஜாக்
பச்சை ஜனாப் முகம்மது தாவுத்
இவர்கள் சிங்கபூரில் சொந்தமாக மில் வைத்து மசாலா வினியோகம் செய்தவர்கள் .
9) ஜனாப் சேக் அலாவுதீன் ,
சீத்தாவாடி சந்து,
இவர் சிங்கபூரில் நாணயம் மாற்று தொழிலும்,சூப்பர் மார்க்கெட்டும் வைத்திருந்தவர்.
10) (மர்ஹும்)மௌளானா அபூபக்கர் ,
இவர் சிங்கபூரில் துணிக்கடை வைத்திருந்தார்.
11)மர்ஹூம் ஜனாப் M.அப்துல் காசிம்
PKT ரோடு
முத்துப்பேட்டை
இவர் சிங்கப்பூரில் துணி வியபாரம் செய்து வந்தவர்,கால போக்கில் இவரது புதல்வர்கள் நானயம் மாற்றும் வியாபாரத்தில் ஈடு பட்டு பெரும் அதிபர்கலாக சிங்கையில் இருக்கின்றனர்.
இன்னும் பலர் இருக்கிறார்கள்.
உறவுகளே!
இவர்கள்தாம் "முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர்" உருவாக்கியவர்கள். இனி காலம் இப்பெருமக்களை நினைவில் கொள்ளட்டும். அவர்கள் செய்த, செய்திட நினைத்த காரியங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நன்மையாக்கி வைக்கட்டும்.
-வஸ்ஸலாம்-

No comments:
Post a Comment