முத்துப்பேட்டையில் ஐந்தாவது நாளாக பலத்த மழை மற்றும் மின்சாரம் துண்டிப்பு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 7

முத்துப்பேட்டையில் ஐந்தாவது நாளாக பலத்த மழை மற்றும் மின்சாரம் துண்டிப்பு.





மே 07: தமிழகத்தில்  5-வது நாளாக பலத்த பெய்கிறது. முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங் குவதற்கு முன்னதாகவே வாட்டி வதைத்து வந்த வெயில், அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் கடந்த 30-ந் தேதி முதல் இன்று வரை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னரும் மழை விடாமல் பெய்து வருகிறது. 5-வது நாளாக திருவாரூர், வலங்கைமான், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தது.

திருவாரூரில் காலை 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 1 மணி நேரம் மழை நீடித்தது. இதேபோல் கொரடாச்சேரி, அதை சுற்றி உள்ள கிராமங் களில் பலத்த மழை பெய்தது. முத்துப்பேட்டையில் அதிகாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. கூத்தாநல்லூர், வலங்கைமான், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதி களிலும் பல மணி நேரம் மழை பெய்தது.

நேற்றயை மழை நிலவரம்

காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் முத்துப்பேட்டையில் அதிக பட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டர் அளவுகளில் வருமாறு:-

திருவாரூர்- 23, குடவாசல் - 16, மன்னார்குடி-6, நன்னிலம் - 20, நீடாமங்கலம் - 6, திருத்துறைப்பூண்டி 24, வலங்கைமான் - 12, பாண்ட வையாறு தலைப்பு -10. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 20 மில்லி மீட்டர் ஆகும்.

தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங் களில் ஏராளமான விவசா யிகள் தென்னை பயிர் செய் துள்ளனர்.

தொடர்ந்து 4 மாதங்களாக வெயில் அடித்ததால், தென் னை விவசாயிகள் கலக்கம் அடைந்தனர்.

தண்ணீர் இன்றி தென்னை காய்ந்து விடுமோ என்ற அச்சம் நிலவியது. இந்த நிலையில் தொடர்ந்து 5 நாட்களாக முத்துப்பேட்டை பகுதி களில் மழை பெய்து வருவதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு

கனமழை காரணமாக இன்று மதுக்கூர் அருகே மின் கம்பம் சாய்ததால் மதுக்கூர் துணைமின் நியைத்தை சார்ந்த அதை சுற்றியுள்ள ஊர்களில் மின் இனைப்பு துண்டிக்கப்பட்டது. முத்துப்பேட்டையில் இன்று மாலை 3 மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போழுது வரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்கை பாதிப்படைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here