மே 10: முத்துப்பேட்டை அடுத்த பேட்டை காமென்டி தெரு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கௌசிக்(3). நேற்று மதியம் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது. இதில்; சிறுவன் கௌசிக் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
உடன் பெற்றோர்கள் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு நாய் கடிக்கு மருந்துகளும், வசதிகளும் இல்லை என்பதால் டாக்டர்கள் திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் கூறுகையில்: முத்துப்பேட்டை மாவட்டத்தில் ஒரு பெரிய ஊர், இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
அனைவருக்கும் இந்த மருத்துவ மனை தான் உதவி. மேலும் தாலுக்கா தலை நகராக அறிவிக்கப்பட்ட இந்த முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்தவ மனையாக மாற்றாமல் அரசு கால தாமதம் படுத்தி வருகிறது. அதன் வகையில் இன்று நாய் கடித்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இனியாவது இந்த மருத்துவ மனையில் அனைத்து வசதிகளும் அரசு செய்து தர வேண்டும் என்றார்.
படம் செய்தி:
முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெறி நாய் கடித்த சிறுவன் கௌசிக்கை கொண்டு வந்த காட்சி.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை

No comments:
Post a Comment