மே 25: முத்துப்பேட்டையில் பழுது அடைந்த மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி. முத்துப்பேட்டை பொது மக்கள் நூதன போராட்டம்.
முத்துப்பேட்டையில் மன்னை சாலை சத்திர குட்டை குளம் மற்றம் கும்பகோணம் வங்கி அருகில் உள்ள மின் கம்பம் ஒன்று மிகவும் பழுது அடைந்து எழும்பு கூடாக காட்சி அளிக்கிறது.
எந்த நேரத்திலும் விழும் தருவாயில் உள்ள இந்த மின் கம்பத்தில் உயர் மின் அழுத்த கம்பிகளும், அப்பகுதி கடைகளுக்கு செல்லும் இணைப்பு கம்பிகளும் உள்ளன. தற்பொழுது இந்த மின்கம்பம் எந்த நேர்த்திலும் விழுந்து பெரிய பாதிப்பை உண்டாக்கும் வகையில் அடையாளமாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தின் ஆபத்தை உணர்ந்த அப்பகுதி பொது மக்கள் வியாபாரிகள் மின்சார வாரியத்திடம் புகார் கூறியும் மின் கம்பத்தை அகற்றி மாற்றவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் வெறுத்து போன அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி, முருகேஷ் மற்றும் நாகராஜ், சேகர், பாலசுப்பிரமணியன், செந்தில் உட்பட பலர் நேற்று பழுது அடைந்து எழும்பு கூடாக நிற்கும் அந்த மின் கம்பத்துக்கு மாலை அணிவித்து பத்தி கொழுத்தி இறுதி அஞ்சலி செலுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வியாபாரி மூர்த்தி கூறுகையில்: இந்த மின்கம்பத்தை இனிமேலும் மின்சார வாரியம் மாற்றி தர வில்லை என்றால் அடத்தக்கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்.
படம் செய்தி:
முத்துப்பேட்டை மன்னை சாலை சத்திர குட்டை குளம் அருகில் பழுது அடைந்த மின்கம்பத்தை மாற்றி தராத மின்வாரியத்தை கண்டித்து மின்கம்பத்திற்கு மாலை போட்டு இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை


No comments:
Post a Comment