மல்லிப்பட்டினத்தில் நடந்தது என்ன?? முழு விபரம் வீடியோ மற்றும் புகைப்படம் இணைப்பு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 29

மல்லிப்பட்டினத்தில் நடந்தது என்ன?? முழு விபரம் வீடியோ மற்றும் புகைப்படம் இணைப்பு


மே 29: நேற்று (28-05-2014) இரவு 9.30 மணியளவில் மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 20 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் அங்கு கூடியிருந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்கள். அங்கு கூடிருந்த பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் கொலை வெறி தாக்குதல் நடத்த முடியாமல் திணறிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தப்பியோடிய மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். இதில் தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க முயற்சிக்கப்படும் என கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

தாக்குதலில் அர்ஷாத் ( 21 ) , கையிலும் , அமீன் ( 25 ) கழுத்திலும் , மைதீன் ( 28 ) , நூருல் அமீன் ( 21 ) ஆகியோருக்கு கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உயிர்க்கு போராடிவரும் இவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வெட்டப்பட்ட 3 இளைஞர்களில் ஒருவர் ஊனமுற்றவர் என்பதால் அவருக்கு கடுமையான முறையில் வெட்டு விழுந்ததால் அதிகப்படியான இரத்தபோக்கு ஏற்பட்டது.

மல்லிபட்டினம் ஜமாஅத் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கி கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிகின்றன. காவல்துறையால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மர்ம கும்பல் நடத்திய பயங்கர கொலை வெறி தாக்குதலை அடுத்து பதற்றமாக காணப்படும் மல்லிபட்டினம் பகுதியில் ஏராளமான் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். எவ்வித அசம்பாவிதமும் நடைபெற்றாமல் தடுக்க மல்லிபட்டினம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு பேர் கைது

மல்லிப்பட்டினம் பாஜக கட்சி சேர்ந்த மணிகண்டன், முருகானந்தம், ஆனந்தம் ஆகியோரையும், புதுப்பட்டினத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவனையும் காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 4 பாஜக பயங்கரவாதிகளையும் நேவியில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட SP க்கள் மல்லிப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளனர்.

போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள்












தகவல்: அதிரை நியூஸ் மற்றும் அதிரை பிறை




வீடியோ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here