ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 154 பயணிகள் உயிர்தப்பினர். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 3

ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 154 பயணிகள் உயிர்தப்பினர்.



மே03: ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுக்கு நடுவே அதிர்ஷ்டவசமாக 154 பயணிகள் உயிர்தப்பினர்.
ஹைதராபாத்தில் இருந்து 154 பயணிகளுடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்றிரவு 8.45 மணியளவில் தரை இறங்கியது. அப்போது அதன் சக்கரங்கள் இயங்காமல் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, விமானத்தில் இருந்து சுமார் 100 லிட்டர் ஹைட்ராலிக் எண்ணெய் ஓடுதளத்தில் கசிந்தது. 
அந்த எண்ணெய் தீப்பிடிக்காததால் பயணிகள் பெரும் விபத்தில் இருந்து தப்பினர். தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் பயணிகளை மீட்டனர். ஓடுபாதையில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அந்தப் பாதையில் விமானங்கள் புறப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய 10 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. இதைத் தொடர்ந்து, போர்ட் பிளேருக்குச் செல்ல இருந்த அந்த குறிப்பி்ட்ட விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here