கத்தார் நாட்டில் Burger King ட்ரைவ்-த்ரூ கவுன்டருக்கு வந்த அதிசய வாகனம்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, April 28

கத்தார் நாட்டில் Burger King ட்ரைவ்-த்ரூ கவுன்டருக்கு வந்த அதிசய வாகனம்!


ஏப்ரல் 28: கத்தார் நாட்டிலுள்ள அமெரிக்க ஃபாஸ்ட்-ஃபூட் செயின் Burger King-ன் ட்ரைவ்-த்ரூ கவுன்டருக்கு அதிசயமான வாகனம் ஒன்று வந்து நின்றது – ஒரு ஒட்டகம்!

கத்தாரில் ஒட்டகம் நடமாடுவது ஒன்றும் அதிசயமில்லை. ஆனால், ஒட்டக சாரதி ட்ரைவ்-த்ரூ கவுன்டருக்கு ஒட்டகத்தில் வருவது லேசில் காண முடியாத காட்சி.

இதில், ஒட்டகத்துக்கும், அதன் சாரதிக்கும் உதவியாளர் (கிளீனர்?) வேறு கூடவே வந்து சென்றுள்ளார்!

Burger King-ன் ட்ரைவ்-த்ரூ கவுன்டருக்கு ஒட்டகத்தில் வந்தவர், சீஸ்-பர்கர் வாங்கிச் செல்வதை, ஒட்டகத்துக்கு பின்னால் வரிசையில், காரில் இருந்தவர் படம் படித்ததாக  போட்டோ வெளியாகியுள்ளது (மேலே பார்க்கவும்)

நிஜமாகவே ஒட்டகத்தில் பர்கர் வாங்க சென்றார்களா, அல்லது, இது Burger King நிறுவனத்தின் பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா என்பதும் சரியாக தெரியவில்லை.

Burger King-ன் ட்ரைவ்-த்ரூ கவுன்டருக்கு  வந்த நபர், அங்கு ஒட்டகம் உண்பதற்காக எதையும் வாங்கவில்லை என்று தெரிகிறது. அங்கு ஒட்டகம் உண்ணும் விதத்தில் எந்த உணவுப் பொருளும் மெனுவில் இல்லாது இருந்திருக்கலாம்.

ஆமா.. ஒட்டகம் என்ன சாப்பிடும்?

தகவல்: விறுவிறு

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here