ஏப்ரல் 26: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 24.04.2014 நடைபெற்றது. இத்தேர்தலில் 106 வயது ஆன மூதாட்டி தனது சகோதரிகளுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அவரது பெயர் சமுத்திரத்தம்மாள். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள சங்கேந்தி கிராமத்தை சேர்ந்தவர். 24 ஆண்டுக்கு முன் இவரது கணவர் இறந்து விட்டார். ஆரம்பத்திலிருந்து தனது சகோதரிகளுடன் ஒரே குடும்பத்தில் சமுத்திரத்தம்மாள் வசித்து வருகிறார்.
இவர் நாட்டின் முதல் பொது தேர்தல் நடைபெற்ற 1952–ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஓட்டு போட்டு வருகிறார்.
சமுத்திரத்தம்மாள் தனது சகோதரிகளான தேனம்மாள் (96), ஏலம்மாள் (94) ஆகியோருடன் சங்கேந்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்கு சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அவருடன் சகோதரிகள் மகன்கள் ரவிச்சந்திரன், நாகராஜன், சுரேஷ் ஆகியோரும் துணையாக வந்து இருந்தனர். மூதாட்டி சமுத்திரத்தம்மாள் மற்றும் அவரது சகோதரிகள் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வாக்களித்தனர்.
இது குறித்து சமுத்திரத்தமாள் கூறும் போது, நாட்டுக்கு யார் வந்தால் நல்லது நடக்குமோ அவர்களுக்கு நான் வாக்களித்தேன். இதுவரை நடந்த தேர்தலில் நான் வாக்களித்தவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.


No comments:
Post a Comment