சவுதியில் தமிழகத்தை சார்ந்த ஹஜ் பயணிகள் இருவர் விபத்தில் மரணம்! - BBC

BBC

Monday, November 11

சவுதியில் தமிழகத்தை சார்ந்த ஹஜ் பயணிகள் இருவர் விபத்தில் மரணம்!




நவம்பர் 11: சவுதியில் தமிழகத்தை சார்ந்த ஹஜ் பயணிகள் இருவர் விபத்தில் மரணம்!
தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்ட இருவர் மதீனாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து தனியார் ஹஜ் சர்வீஸ் மூலம் பயணம் மேற்கொண்ட தஞ்சாவூரை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவரும், பரமக்குடி அருகே கீளையூரை சேர்ந்த காதர் கனி (வயது 24) ஆகியோர் இவ்விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

மதீனாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பார்வையிட சென்றபோது சனிக்கிழமையன்று காலை இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் ஒரு வாலிபர் இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவர்கள் அனைவரும் எதிர் வரும் செவ்வாயன்று இந்தியா திரும்ப இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment