முத்துப்பேட்டை அருகே இளம்பெண்ணை கடத்திய ஆட்டோ டிரைவர். - BBC

BBC

Tuesday, October 1

முத்துப்பேட்டை அருகே இளம்பெண்ணை கடத்திய ஆட்டோ டிரைவர்.


அக்டோபர் 01: முத்துப்பேட்டை அருகே உள்ள ஒட்டங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் அப்பு என்ற புஷ்பராஜ் (30). ஆட்டோ டிரைவர். இவர் எடையூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்தநிலையில் புஷ்பராஜ் வடகவ்கத்தி தெற்கு தெருவை சேர்ந்த முருகையன் மகள் சரண்யா (19) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து புஷ்பராஜ் சரண்யாவை திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்று விட்டார்.
இது பற்றி முருகையன் எடையூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவுச் செய்து இளம் பெண்ணை புஷ்பராஜ் கடத்தி செல்ல உதவி புரிந்த முத்துப்பேட்டையை சேர்ந்த சாகுல் ஹமீது (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் புஷ்பராஜ் சரண்யாவை மன்னார்குடி பஸ் நிலையத்தில் விட்டு, விட்டு தப்பி சென்று விட்டார். சரண்யாவை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இளம் பெண்ணை கடத்திய புஷ்பராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment