முத்துப்பேட்டை அருகே மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது. - BBC

BBC

Sunday, October 27

முத்துப்பேட்டை அருகே மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது.


அக்டோபர் 27: முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூரை சேர்ந்தவர் பொதுவுடைமூர்த்தி (வயது 40). இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக பல புகார்கள் உள்ளது. இந்தநிலையில் மீண்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட பொதுவுடைமூர்த்தியை மன்னார்குடி தாசில்தார் சொக்கு பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ் மகேஸ்வரன், பொதுவுடைமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் நடராசன், பொதுவுடைமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment