முத்துப்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை - BBC

BBC

Monday, October 21

முத்துப்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை

















அக்டோபர் 21: முத்துப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (33). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் மாலா.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மாலா தனது தாய் வீட்டிற்கு சென்று வந்தார். காளிதாஸ் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை.

இதனால் மனம் உடைந்த காளிதாஸ் விஷமாத்திரை சாப்பிட்டு விட்டார். திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment