பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கினர். - BBC

BBC

Monday, September 30

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கினர்.



செப்டம்பர் 30: பரக்கலக்கோட்டை அருகே பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யன்பெருமாள். இவருடைய மகன் சிலம்பு (வயது 25). இவர் நேற்று முன்தினம் பரக்கலக்கோட்டை கிராமம் அருகே உள்ள பாலத்தின் அருகில் கோரை புற்களுக்குள் மறைந்து மதியம் உட்கார்ந்திருந்தார். அப்போது சிலம்பு அந்த வழியாக வந்த கிருஷ்ணாபுரம் பள்ளி மாணவிகளை அழைத்து தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. 
இதனால் மாணவிகள் சுதாரித்துக்கொண்டு தப்பி ஓடி தங்கள் பெற்றோர்களிடம் இது குறித்து கூறினர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த மாணவிகளின் பெற்றோர்கள் சிலம்புவை அவன் மறைந்திருந்த இடத்தில் இருந்து சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவரை பரக்கலக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். பின்னர் அது குறித்து மதுக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment