அதிராம்பட்டினம் அருகே பேருந்து மீது லாரி மோதி விபத்து. - BBC

BBC

Sunday, September 29

அதிராம்பட்டினம் அருகே பேருந்து மீது லாரி மோதி விபத்து.





செப்டம்பர் 29: இன்று பகல் 2:00 மணியளவில் அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள சேண்டாக்கோட்டை ஊராட்ச்சி அருகில் சென்று கொண்டிருந்த A.S.M. தனியார் பேருந்தின் பின்புறம் அதி வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் பேருந்தில் பின்புறம் மற்றும் லாரியின் கண்ணாடி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலிசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பட்டப்பகலில் மக்கள் அதிகம் பயணிக்கும் பேருந்துக்கு நிகழ்ந்த இந்த விபத்தால் அதிராம்பட்டினம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தகவல்: அதிரை செய்தித்தளங்கள்

No comments:

Post a Comment