முத்துப்பேட்டை அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி. - BBC

BBC

Wednesday, September 11

முத்துப்பேட்டை அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி.

செப்டம்பர் 11: முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யா கணபதி. இவரது மகன் முகேஷ்குமார். (வயது 14). இவன் அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் முகேஷ்குமார் தனது நண்பர்கள் 5 பேருடன் அப்பகுதியில் உள்ள பாமணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அங்குள்ள பாலத்தில் இருந்து டைவ் அடித்து குளித்ததாக கூறப்படுகிறது.

நீச்சல் தெரியாததால் முகேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு திருத்துறைப் பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment