செப்டம்பர் 28: முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது32). இவருடைய தம்பி தேவராஜ் (24). நேற்று காலை அண்ணன்–தம்பி இருவரும் இடும்பாவனத்தில் உள்ள தங்கள் வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் (40) என்பவருக்கும், அண்ணன்–தம்பி இருவருக்கும் இடையே தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் மண்வெட்டியால் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் தம்பி தேவராஜ் தான் வைத்திருந்த மண்வெட்டியால் லட்சுமணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், லட்சுமணன் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இரு தரப்பினரும் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பெர்னாண்டஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment