தோனி. கோலி .சச்சின். கம்பீர். ரோஹித், ரெய்னா ஜடேஜா, அஸ்வின், பிரவீண் குமார் ,வினய் குமார், ராகுல் சர்மா, யூசுப் பதான், மனோஜ் திவாரி, இர்ஃபான் பதான்.
மார்ச் 1: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் யூசுப் பதான், கொல்கத்தா வீரரான அசோக் தின்டா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேப்டனாக தோனியும், துணை கேப்டனாக விராட் கோலியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தோனி மீது சர்ச்சை எழுந்ததன் எதிரொலியாகவே, விராட் கோலியை வருங்காலத்தில் கேப்டனாக்கும் முயற்சியாகவே இப்போது அவருக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே மூத்த வீரர் கம்பீர் இருந்தும் அவருக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
100-வது சதமடிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையிலேயே சச்சினுக்கு வாய்ப்பு வழங் கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக சச்சினுக்கும் ஓய்வு கொடுக்க முடிவு செய்திருந்ததாகக் கூறப்பட்டது.
முத்தரப்புத் தொடரில் சரியாக விளையாடாவிட்டாலும், ரெய்னாவும், ரவீந்திர ஜடேஜாவும் அதிர்ஷ்டவசமாக ஆசிய கோப்பை போட்டியிலும் இடம்பிடித்துவிட்டனர்.
ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, துலீப் டிராபி போட்டியில் 3 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் விளைவாகவே இப்போது அணியில் இடம்பிடித்துள்ளார் அசோக் தின்டா. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர் மும்பையில் புதன்கிழமைகூடி அணியைத் தேர்வு செய்தனர்.
ஆசிய கோப்பை போட்டி வங்கதேசம் தலைநகர் டாக்காவில் மார்ச் 11-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியா, இலங்கை, வங்கேதசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது.
அணி விவரம்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), விராட் கோலி (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், கெüதம் கம்பீர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீண் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசுப் பதான், மனோஜ் திவாரி, இர்ஃபான் பதான், அசோக் தின்டா.

No comments:
Post a Comment