கியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது - BBC

BBC

Thursday, March 1

கியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது




மார்ச். 1- தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்.. வாடகை ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டதால் எண்ணெய் நிறுவனங்கள் புதிய வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றி லாரி வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஏற்கனவே ஓடும் கியாஸ் டேங்கர் லாரியுடன் கூடுதலாக 600 டேங்கர் லாரிகளையும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக்கை அவர்கள் தொடங்கினார்கள்.
இதனால் இந்த சங்கத்தில் இணைந்து உள்ள 3600 கியாஸ் டேங்கர் லாரிகள் நேற்று நள்ளிரவு முதல் ஓடவில்லை. கடந்த மாதம் (ஜனவரி) 12-ந் தேதி முதல் 4 நாட்கள் இதே கோரிக் கைகளை வலியுறுத்தி கியாஸ் டேங்கார் லாரி அதிபர்கள். 4 நாள் வேலை நிறுத்த்ததில் ஈடுபட்டனர். அப்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட் ரோலியம் கார்ப்பரேசன், ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களும் டேங்கார் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை பிப்ரவரி 15-ந் தேதிக்குள் நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்து இருந்தன.
ஆனால் இது வரை கோரிக்கைகளை நிறைவேற்றாததால் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். வேலைநிறுத்தம் குறித்து தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் இன்று காலை நிருபரிடம் கூறியதாவது:
நேற்று நள்ளிரவு முதல் கியாஸ் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநிலங்களில் மொத்தம் 52 கியாஸ் பிளாண்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை,சேலம், திருச்சி, கோவை, தூத்துக்குடி, உள்பட 18 பிளாண்டுகளும், கேரளாவில் 8 இடத்திலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும், கர்நாடகாவில் 9 இடத்திலும், ஆந்திராவில் 14 இடத்திலும் பிளாண்டுகள் உள்ளன.
இந்த பிளாண்டுகளுக்கு எங்கள் சங்கத்தில் உள்ள 3600 டேங்கர் லாரிகள் நேற்று நள்ளிரவு முதல் கியாஸ் ஏற்றிச்செல்லவில்லை. இந்த பிளாண்டுகள் முன்பும், லாரி பட்டறைகளிலும், லாரி உரிமையாளர் சங்க அலுவலகத்திலும் லாரி களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து உள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தால் எங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டரை கோடி வீதம் நஷ்டம் ஏற்படும். எண்ணை நிறுவனங்களுக்கு ரூ40 கோடிவரை நஷ்டம் ஏற்படும்.
கியாஸ் ஏற்றி வந்தர்ல தான் சிலிண்டர்களில் கியாஸ்களை நிரப்ப முடியும். எங்கள் வேலை நிறுத்தத்தால் கியாஸ் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டு, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும். எங்கள் கேரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு இது வரை எண்ணெய் நிறுவனங்கள் அழைக்கவில்லை. இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் யாரும் வாய் திறக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அதிகமாக வராத தால் கியாஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சேலம் உள்பட முக்கிய நகரங்களில் கியாஸ் பதிவு செய்து புதிய சிலிண்டர் வர 25 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகிறது. தற்போது கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment