ஆள்மாறாட்டம் செய்வதை தவிர்க்க பிளஸ்-2 தேர்வில் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்துடன் ஹால்டிக்கெட் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 3

ஆள்மாறாட்டம் செய்வதை தவிர்க்க பிளஸ்-2 தேர்வில் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்துடன் ஹால்டிக்கெட்




மார்ச்.3- பிளஸ்-2 தேர்வு மார்ச் 8-ந்தேதி தொடங்குகிறது. 9 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பு நேரத்தில் மாணவர்கள் மின்விசிறி இன்றி படிப்பது சிரமம் என்பதை கருத்தில் கொண்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி 11 ஆயிரம் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வாடகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க இந்த வருடம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் இதுவரை மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும். ஆள்மாறாட்டம் செய்யும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டில் உள்ள படத்தை அகற்றிவிட்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்த வாய்ப்பு இருந்தது.
இந்த மோசடியை தடுக்க மாணவரின் புகைப்படம் ஸ்கேன் செய்யப்பட்டு அது ஹால்டிக்கெட்டில் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய முறை முதல் முதலாக இந்த வருடம் 8-ந் தேதி தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்விலும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி.தேர்விலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த வருடம் முதல் முதலாக பிளஸ்-2 மாணவர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மாணவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய மார்க் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதையும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here