அமெரிக்க தபால் துறையில் 30 ஆயிரம் பேர் வேலை பறிப்பு - BBC

BBC

Saturday, February 25

அமெரிக்க தபால் துறையில் 30 ஆயிரம் பேர் வேலை பறிப்பு



பிப் 25- நம்ம ஊரில் மட்டும் அல்ல, அமெரிக்க தபால் துறையும் கூட பெரும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. போன் வசதி, இ மெயில் என எல்லாமே எந்திரமயமாகிவிட்டதால் அமெரிக்காவில் தபால் துறையை நாடும் மக்கள் மிகவும் குறைந்துவிட்டார்கள்.

எனவே போதுமான வருமானம் இல்லை. தற்போது தபால் துறை ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இது 2015-ம் ஆண்டில் ரூ 90 ஆயிரம் கோடியாக அதிகரிக்கலாம் என கணக்கிட்டு உள்ளனர். எனவே அமெரிக்க பாராளுமன்றம் உதவவேண்டும் என்று தபால் துறை கோரிக்கை விடுத்தது.

ஆனால் பாராளுமன்றம் உதவ முன்வரவில்லை. எனவே நஷ்டத்தை குறைக்க தபால் துறையில் வேலைபார்க்கும் 30 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளனர். மேலும் 260 தபால் நிலையங்களையும் மூட முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment