மார்ச் 16: முத்துப்பேட்டை பக்கிரிவாடி தெருவை சேர்ந்த அப்துல் கரீம் மகன் ஹாஜா மைதீன் (34). சொந்தமாக மினி வேன் வைத்து தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றி சென்று வருகிறார். மேலும் ஆட்டோவும் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளிகளில் இருந்து குழந்தைகளை மினி வேனில் ஏற்றி சென்று வீடுகளில் இறக்கிவிட்டார். பின்னர் வீட்டிற்கு அருகில் தெரு முனையில் மினி வேனை நிறுத்தி வைத்திருந்தார்.
நள்ளிரவு மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் வருவதற்குள் வேனின் பெரும் பகுதி எரிந்து சேதமடைந்தது.
மர்ம நபர்கள் பெட்ரோல் டேங்க்கை உடைத்து தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து ஹாஜா மைதீன் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து தொழில் போட்டியா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரணை நடத்திவருகிறார்.
No comments:
Post a Comment