முத்துப்பேட்டையில் கலவரம்! அனைத்து சமூதாய இயக்க தலைவர்கள் கண்டனம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 3

முத்துப்பேட்டையில் கலவரம்! அனைத்து சமூதாய இயக்க தலைவர்கள் கண்டனம்.


முத்துப்பேட்டையில் கலவரம்! அனைத்து சமூதாய இயக்க (SDPI, TMMK, TNTJ, INTJ இதர இயக்கங்கள்) தலைவர்கள் கண்டனம்




முத்துப்பேட்டை தர்காவின் சேத பகுதிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ பேட்டி!
முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அம்மா தர்கா மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்டது. அதனை நேற்று திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ உலகநாதன,; மாவட்ட ஊராட்சி ஊறுப்பினர் முருகையன், முன்னால் ஒன்றியக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் எம்.எல்.ஏ உலகநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: முத்துப்பேட்டையில் நடைப்பெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் ஏற்ப்பட்ட பிரச்சனை சம்பவங்களில் காவல் துறை தவறு செய்தவர்கள் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களின் நிர்பந்தத்திற்காக சம்மந்தமில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. இந்த நிகழ்வு ஏற்படுவதற்கு முன் காவல் துறை நான்கு அறிந்து போதிய பாதுகாப்பு போட்டு இருந்தால் இந்த விரும்பத்தக்காத நிகழ்வு நடந்திருக்காது என்றார.; இதுகுறித்து முன்னால் ஒன்றியக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் கூறுகையில்: சம்மந்தப்பட்டவர்கள் சரியான குற்றவாளிகளை காவல் துறையிடம் ஒப்படைத்து சம்மந்தம் இல்லாதவர்களை மீட்க வேண்டும் என்றார. அப்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச்செயலாளர் ராமநாதன், நகர செயலாளர் மார்க்ஸ், ஜம்புவானோடை கிராம கமிட்டி தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர.; 

முத்துப்பேட்டை தர்காவின் சேத பகுதிகளை பார்வையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயலாளர் அப்துல் சத்தார் பேட்டி!

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவாகோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் தர்கா மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்;டது. அதனை நேற்று சோசியல் டெமாக்ராடிக் பார்டி ஆப் இந்தியா கட்சியின்(எஸ்.டி.பி.ஐ) மாநில செயலாளர் அப்துல் சத்தார் பார்வையிட்டு. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு ஓர் இளைஞர் கூட்டம், முத்துப்பேட்டைக்குள் புகுந்து மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இங்கிருக்கூடிய வழிப்பாட்டு தளத்தை சேதமாக்கி, அதன் மதில் சுவரை இடித்து அருகாமையில் உள்ள குடிசைகளையும் பிரித்து எரிந்து, அப்பாவி மக்களை அச்சுருத்தி ஒரு சிறுவர் என்று கூட பார்க்காமல் ஹலீல் ரஹ்மானை தாக்கி விட்டு சென்று இருக்கின்றார்கள். இது எதார்ச்சையாக நடந்த செயல் என்று நாம் எடுத்துக் கொள்ளமுடியாது. இது காலம் தொட்டு நடந்து வந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலே ஒரு திட்டமிட்ட செயல். ஒரு மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இது ஒரு ஒத்திகை என்று தான் அறிய வேண்டும். வழிப்பாட்டு தளத்தின் மேல் ஏரி அதன் விளக்குகளை தைரியமாக உடைத்துள்ளனர். இதற்கு முன்பு இந்த தர்காவின் பக்கத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என பிரச்சனை செய்தனர். பின்னர் இதே பகுதியில் ஒரு சூழாயுதத்தை புதைத்து வைத்து இது கோவில் பகுதி என்ற பிரச்சனையை ஏற்படுத்தி பார்த்தனர். இப்படி தொடர்ந்து பிரச்சனைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தவே இன்று வழிப்பாட்டு தளம் மீது தாக்கி ஒத்திகை நடத்தி உள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம்தான் அவர்களுக்கு உள்ளது. இதனை பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கைக்கோர்த்து இந்த செயலை அறங்கேற்றி உள்ளது. இது வரை இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காத அளவிற்கு காவல் துறை நல்ல ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாபெரும் போராட்டத்தில் ஈடுப்படும் என்றார். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், நாகை தாஜ், மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், நகரத் தலைவர் சேக் முனைதீன், நகர செயலாளர் தீன் முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.


முத்துப்பேட்டை தர்காவின் சேத பகுதிகளை பார்வையிட்ட மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் தமீமும் அன்சாரி பேட்டி!

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் ஏற்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி நேற்று மாலை பார்வையிட்டார். அப்பொழுது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: உலகெங்கும் பல்வேறு சமுதாய மக்கள் வந்து செல்லும் இடமாகவும், தமிழகத்தில் புகழ் பெற்ற தர்காக்களின் ஒன்றாக இருக்கக்கூடிய முத்துப்பேட்டை தர்காக்களின் ஒன்றான அம்மா தர்கா மீது மத வெறி பிடித்த 150-க்கும் மேற்பட்டோர் திடீரென்று உள்ளே புகுந்து சேதமாக்கி உள்ளனர். சுற்று சுவரை தரைமட்டமாக்கி பல பகுதிகளை கல் வீசி சேதமாக்கி உள்ளனர். இதில் மின் கம்பங்கள், மின் விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளது. அதே போல் அருகில் உள்ள வீடுகளையும் சூரையாடி சென்றுள்ளனர். பலரையும் தாக்கி உள்ளனர். இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். முத்துப்பேட்டை தர்கா என்பது காலம் காலமாக சமூக நல்லினக்கத்துக்குக்கூடிய சிறப்பிடமாக உள்ளது. சமூக நலனையும், பொது அமைதியையும் சீர்குழைக்க விரும்பிய தீய சக்திகள் நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் கடந்த காலங்களில் முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடை பகுதியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்கள் மீது அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்காமல் போன காரணத்தினால்தான் இன்று தர்காவின் மீது மிக பெரிய தாக்குதலை அந்த மத வெறி சக்திகள் செய்து இருக்கிறார்கள். எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை. இந்த பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் இவர்கள் நலன் கருதி நிரந்தரமாக இங்கு அதிரடி படை போலீசாரை தமிழக அரசு நியமண செய்ய வேண்டும். உடைக்கப்பட்ட தர்காவின் சுற்று சுவரை தமிழக அரசு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதியின் நடவடிக்கை தொடர்ந்து ஒரு சார்ந்து இருப்பதினால்தான் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. காவல் துறை உயர் அதிகாரிகள் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும். பாராபட்சம் இல்லாத ஒரு நேர்மையான அதிகாரியை நியமணம் செய்ய வேண்டும். இந்த தர்கா தாக்குதலை அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ம.க, விடுதலை சிறுத்தை, இடது சாரி கட்சிகள் உட்பட அனைத்து கட்சியினரும் கண்டிக்க வேண்டும். தற்பொழுது தஞ்சை எஸ்.பி.தர்மராஜ், திருவாரூர் எஸ்.பி.காளிராஜ் மகேஷ் குமார், மகேஷ்குமார் ஆகியோரை சந்தித்து புகார் தெரிவித்;தோம். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அப்படி தவறும் பட்சத்தில் ஒரு வாரம் பொறுத்து மாநிலம் தழுவிய போரட்டத்தில் ஈடுப்படுவோம். மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட கலவரம் நடந்துள்ளது. அதன் தொடர்ச்சிதான் இந்த சம்பவம். பா.ஜ.க தலைவர் அமித்ஷா தமிழகத்துக்கு வந்த பிறகு தமிழக பா.ஜ.கவினருக்கு தனி துனிச்சல் ஏற்பட்டுதான் இந்த சம்பவத்தை அறங்கேற்றி இருப்பதாக கருதுகிறேன். இவ்வாறு தமீமுன் அன்சாரி கூறினார். பேட்டியின் போது தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப், டிரஸ்டி தமீமுன் அன்சாரி சாஹிப், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுதீன், நகர தலைவர் சம்சுதீன், ஒன்றிய தலைவர் நைனா முகம்மது, வழக்கறிஞர் தீன்முகம்மது, நிர்வாகி சீமான் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here