ஜனவரி 01: முத்துப்பேட்டையில் கார் கண்ணாடிகள் உடைப்பு மீண்டும் பதற்றம்!
இந்த 2015 ஆண்டு முத்துப்பேட்டை மக்களின் சோகமான ஆண்டாக அமைந்து இருக்கிறது.
இன்று அதிகாலை 1 மணிக்கு முத்துப்பேட்டை தர்கா அருகில் சுவர்களை இடித்தும் மற்றும் வீடுகளில் வேளிகளை உடைத்தும் சில கயவர்கள் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டனர். இதனால் முத்துப்பேட்டையில் பதற்றமான சூழ்நிழைகள் நிலவியது. இந்த பதற்றம் இன்னும் நீங்காத நிலையில் செம்படவன்காடு ரயில்வே கேட் அருகில் கார்கள் பழுது பார்க்கும் இடம் உள்ளது. அங்கு வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. இரவில் சுமார் 1-00,மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.
மனித நேயத்துடன் ஒற்றுமையாக வாழு நம் சமுதாய மக்களுடன் ஒற்றுமையை பாழ்படுத்தும் சமூக விரோதிகளுக்கு இடம் கொடுக்காமல் அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி மாநில அரசையும் மற்றும் காவல் துறையிடம் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment