நவம்பர் 20: பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வீரமணி (25). பிஇ பட்டதாரியான இவர் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணி செய்து வந்தார். இவரும் இவரது நண்பர்கள் 5 பேரும் தி.நகரில் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். சூப்பர் மார்கெட்டை தினமும் காலையில் திறப்பது வீரமணியின் வழக்கம்.அதன்படி, இன்று காலை வீரமணி தனது நண்பர் ராஜ்குமார் (25) என்பவருடன் பைக்கில் மயிலாப்பூர் நோக்கி புறப்பட்டார். மின்னல் வேகத்தில் அவரது பைக் சென்றது. கதீட்ரல் சாலை, பின்னி சாலை சந்திப்பு அருகே செல்லும்போது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது.மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், வீரமணி தலை சாலை நடுவே இருந்த மின் கம்பத்தில் மோதி துண்டானது.
ராஜ் குமார் கால் ஒடிந்து கதறி அழுதார். ரத்த வெள்ளத்தில் வாலிபர்கள் கிடப்பதை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் ரவி குமரன், எஸ்ஐ சோபியா ஆகியோர் சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், சம்பவ இடத்திலே பலியான வீரமணி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “வாலிபர்கள் அதிவேகத்தில் பைக்கை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
தகவல்: அதிரை நியூஸ்
No comments:
Post a Comment