சினிமா பாணியில் பிளேடால் கையை கிழித்த வாலிபர்: அவமானத்தில் இளம்பெண் தற்கொலை ! ஒரு தலை காதலால் விபரீதம் ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 9

சினிமா பாணியில் பிளேடால் கையை கிழித்த வாலிபர்: அவமானத்தில் இளம்பெண் தற்கொலை ! ஒரு தலை காதலால் விபரீதம் !


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த விளக்குடி மேலத்தெருவை சேர்ந்த சீனிவாசன் மகள் மங்களநாயகி(21). கோட்டூர் தோட்டம் புதுதெருவை சேர்ந்த  குணசேகரன் மகன் கண்ணன்(23). இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டூர் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்தனர். அப்போது மங்களநாயகியை கண்ணன் ஒருதலைபட்சமாக காதலித்தார். இதன்பிறகு கண்ணன் வெளிநாடு சென்று விட்டார். 15 தினங்கள் முன்பு ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மங்களநாயகி வீட்டிற்கு சென்ற கண்ணன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மங்களநாயகியை வற்புறுத்தினார். இல்லையென்றால் கடத்தி சென்றுவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் பிளேடால் தனது கையை கிழித்துக்கொண்டார். 

ரத்தம் கொட்டியதால், அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். இந்த அவமானத்தால் மங்களநாயகி அன்று மாலையே தூக்கு மாட்டிக்கொண்டார். அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மங்களநாயகி இறந்தார். திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து கண்ணனை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here