முத்துப்பேட்டை அருகே பெண் மர்மமான முறையில் மரணம்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 26

முத்துப்பேட்டை அருகே பெண் மர்மமான முறையில் மரணம்!


அக்டோபர் 26: முத்துப்பேட்டை அருகே சனிக்கிழமை பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துப்பேட்டை காவல் சரகம், ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (48). இவருக்கும் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடியைச் சேர்ந்த வேதநாயகிக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, நீண்ட நாள்களாக தம்பதியர் பிரிந்து வாழ்கின்றனர். வேதநாயகி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். 
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் இருதரப்பையும் சேர்ந்தோர் சமரசம் செய்து வைத்ததால், தம்பதியர் சேர்ந்து வாழ்ந்தனர். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு ஜவுளி எடுக்காததால், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை வேதநாயகி வீட்டில் மர்ம
மான முறையில் இறந்து கிடந்தார். 
தகவலின் பேரில், முத்துப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து சந்திரசேகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here