எனது தேர்ச்சிக்கு பள்ளி முதல்வரும் ஆசிரியரும் தான் காரணம் ரஹ்மத் பள்ளி மாணவி பேட்டி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 10

எனது தேர்ச்சிக்கு பள்ளி முதல்வரும் ஆசிரியரும் தான் காரணம் ரஹ்மத் பள்ளி மாணவி பேட்டி.


மே 10: எனது தேர்ச்சிக்கு பள்ளி முதல்வரும் ஆசிரியரும் தான் காரணம் ரஹ்மத் பள்ளி மாணவி பேட்டி. முத்தப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி அனீஸ் பாத்திமா பிளஸ்-2 தேர்வில் அரபி பாடத்தில் 194 மார்க் எடுத்து மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். 

அவர் ஆங்கிலம் 178, இயற்பியல் 150, உயிரியல் 159, வேதியல் 169, கணக்கு 145 மொத்தம் 995 மார்க் பெற்றுள்ளார். அனீஸ் பாத்திமா அரியலூர் பகுதியை சேர்ந்த உதுமான் அலி மகள் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். 

மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றதை குறித்து நிருபரிடம் கூறுகையில்: நான் தேர்ச்சி பெற்றதை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது தேர்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் சகுந்தலா, ஆசிரியர் பசூல் ரஹ்மான் ஆகியோர் முழு காரணம். எனது பெற்றோர்கள் முழு ஊக்கத்தை தந்தார்கள். நான் கவுன்சிலிங் போய் மேற் படிப்பு குறித்து முடிவு செய்வேன் என்றார்.

தாய் பவுசியா பேகம் கூறுகையில்: எனது மகள் இந்த அளவுக்கு தேர்ச்சி பெருவாள் என்று கணவில் கூட நினைத்து கூட பார்க்கவில்லை. மகளின் மேற்படிப்புக்கு பெரும் முயற்சியும் ஒத்தழைப்பும் கொடுப்போம் என்றார். 

தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here