அக்டோபர் 27: முத்துப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர் எழில்நகரைச் சேர்ந்த பால்சாமி மகன் விஜயகுமார் (வயது 30). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றபோது சைக்கிளில் சென்ற கள்ளிக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி (60) மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் விஜயகுமார்மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான விஜயகுமாருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
No comments:
Post a Comment