MIWAவின் 31 - ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பொறுபேற்பு.. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 29

MIWAவின் 31 - ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பொறுபேற்பு..



அன்புடையீர், அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)

நமது முத்துபேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG.No 32/2009) மாதாந்திர கூட்டம் மற்றும் புதிய நிர்வாக தேர்ந்தெடுப்பு கூட்டம் துபாய் ஹோர் அல் அன்ஸ் T.E.S.யூசுப் & நண்பர்கள் ரூமில் 20.09.2013. வெள்ளிகிழமை இரவு 8.30 மணியளவில் நடைபெற்றது, சங்கத்தின் தலைவர் H.ஷேக் தாவூது அவர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார்கள் A.ஹசன் அவர்கள் கிராத் ஓதி கூட்டம் துவங்கியது.

நடப்பு வருட செயல்பாடுகளையும் வரக்கூடிய 31-ஆம் ஆண்டின் புதிய திட்டங்களுடன் இளைஞர்கள் தலைமையேற்று நடத்தி இச்சங்கத்தின் வளர்ச்சியடைய பாடுப்படும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதுடன் 31-ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் கூட்டத்தின் முழு ஒத்துழைப்புடன் கீழ்க்கண்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கவுரவ தலைவர் : H.ஷேக் தாவூது

தலைவர் : A. ஹாஜா நஜிபுதீன் (ஆ.நே.)

துணை தலைவர் : M.R.S. அஹமது ராவுத்தர்

துணை தலைவர் : T. E.S. யூசுப்

பொது செயலாளர் : N. முஹம்மது ஷேக் தாவூது

துணை செயலாளர் : N. அப்துல் நாசர்

துணை செயலாளர் : F. நவாஸ்கான்

பொருளாளர் : M.A.K. ஹிதயாத்துல்லாஹ்

துணை பொருளாளர் : S. இர்ஷாத் அஹமது

மக்கள் தொடர்பு : S. ஜஹபர் ஹுசைன் & A. ஆசாத் காமில்

தகவல் தொடர்பு : R. அலாவுதீன் & A. அல்-அமீன்

ஆகியோர்கள் ஏகமனதாக கூட்டத்தில் தெடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகத்தினர்களின் செயல்பாடுகள் குறித்தும் குவிக்கும் விதமாக P.M. ஜாஹிர் ஹுசைன் அவர்கள் சிறிய உரை நிகழ்த்தினார்கள். 

இன்ஷா அல்லாஹ் இந்த 31-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் வரும் ஹஜ்ஜு பெருநாள் அன்று பொறுப்பேற்று செயல்படுவார்கள் என்றும் செயற்குழு மற்றும் ஆலோசனை குழு (நிர்வாக பட்டியல்) அன்று வெளியிடப்படும். 

நன்றயுரை T.E.S. யூசுப் சுகையில் அவர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்தி தந்த சங்கத்தின் உறுப்பினர்களக்கும் மற்றும் நமதூர்வாசிகளுக்கும் சலாத்தினை தெருவித்து கொண்டு கூட்டம் இரவு உணவுடன் இனிதே நிறைவுற்றது. 

வஸ்ஸலாம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here