காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் 6-வது நாளாக தொடருகிறது. மரண எண்ணிக்கை 100ஐ தாண்டியது! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 20

காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் 6-வது நாளாக தொடருகிறது. மரண எண்ணிக்கை 100ஐ தாண்டியது!



நவம்பர் 20: ஹமாஸ் ஆளும் காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் 6-வது நாளாக தொடருகிறது. பெண்களும், குழந்தைகளும் உள்பட 20க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மரணமடைந்தனர். புதன் கிழமை ஹமாஸின் முக்கிய கமாண்டர் அஹ்மத் ஜஃபரி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த தாக்குதலில் மரணித்த ஃபலஸ்தீன் மக்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டிவிட்டது. 600க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.
கான் யூனுஸில் இஸ்ரேல் நடத்திய விமானத்தாக்குதலில் பைக்கில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுடன் இருந்த பிஞ்சுக் குழந்தைக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. கரானாவில் 2 விவசாயிகள், காஸ்ஸாவில் 23 வயதான பயணி, மத்திய காஸ்ஸாவில் உள்ள தாருல் பலாவில் ஒரு குடும்பத்தில் 3 பேர், தெற்கு காஸ்ஸாவில் உள்ள ஸைத்தூனில் ஒரு பெண்ணும், 3 குழந்தைகளும் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களுக்கு பலியாகியுள்ளனர்.
பைத்துல்லஹியாவில் 2 பேரை மரணித்த நிலையில் கண்டுபிடித்ததாக ஃபலஸ்தீன் மெடிக்கல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று மாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்கின. காஸ்ஸாவின் போலீஸ் தலைமையகம் இஸ்ரேலின் அகோர தாக்குதலில் தகர்ந்துபோனது. காஸ்ஸாவின் ஊடக மையத்தின் மீது நேற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஃபத்ஹ் ஆளும் மேற்கு கரையிலும் இஸ்ரேல் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. காஸ்ஸாவில் இருந்து மேற்கு கரைக்குச் செல்லும் நுழைவு வாயிலில் உள்ள மஸ்ஜிதை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் மஸ்ஜித் தகர்ந்துபோனது. காஸ்ஸாவில் ஹமாஸ் ஆதரவு தொலைக்காட்சியான அல் அக்ஸாவின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் பறித்துக்கொண்டது. ஆனால், சானலுக்கான கட்டுப்பாடு சில மணிநேரங்கள் மட்டுமே இஸ்ரேல் வசம் இருந்ததாக அல் அஹ்ராம் பத்திரிகை கூறுகிறது.
இந்நிலையில் பலவருடங்களாக மோதல் சூழல் நிலவிய ஃபத்ஹும், ஹமாஸும் ஒன்றினைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தீர்மானித்துள்ளதாக ஃபத்ஹின் செய்தி தொடர்பாளர் ஜிப்ரீல் ரஜுப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது கொடூரமான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் ஹமாஸும் பதிலடி தாக்குதலை வலுப்படுத்தியுள்ளது. ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் ஏவுகணகள், இஸ்ரேலின் வர்த்தக தலைநகரமான டெல் அவீவையும், அதற்கு அப்பாலும் சென்று தாக்கின.
ஆனால், உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை. சில தினங்களுக்கு முன்பு ஹமாஸின் ராக்கெட்டுக்கள் டெல் அவீவை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. காஸ்ஸா கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருந்த இஸ்ரேலின் கப்பலையும் ஹமாஸ் தாக்கியுள்ளது. இம்மாதம் 14-ஆம் தேதி முதல் 770 ராக்கெட்டுக்களை கஸ்ஸாம் பிரிகேடும், இஸ்லாமிக் ஜிஹாதும் இஸ்ரேலை குறிவைத்து ஏவியுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here