
நவம்பர் 24: துபாய் ஈமான் அமைப்பின் 37வது ஆண்டு விழா 02.12.2012 அன்று அமீரகத்தின் 41வது தேசிய தினத்தன்று ஷார்ஜா ரயன் ஸ்டார் சர்வதேச பள்ளியில் காலை 9.30மணிக்கு நடைபெற இருக்கிறது என பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. சிறப்பு விருந்தினர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர்.
முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்படும். பேருந்துகள் தேரா சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் வரும் 2ம் தேதி காலை 8.00 மணிக்கு புறப்படும்.
முன்பதிவு செய்திட 056 684 71 20 / 050 5196 433 எனும் அலைபேசி அல்லது info@imandubai.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment