ஜுலை 19: இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும் ஜகாத் கொடுத்தும் வாருங்கள் ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னால் அனுப்பி வைக்கின்றீர்களோ அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (2:110)
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )
நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 13.07.2011 அன்று துபாய், துணை தலைவர் சகோதரர் A.ஹாஜா நஜிபுதீன் & ரூம் நண்பர்கள் அறையில் கூட்டம் நடைபெற்றது அவ்வமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு மிக்க ரமலான் மாத பித்ரா அரிசி வினியோகம் சென்ற வருடத்தை போன்று இவ்வருடமும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும், பித்ரா வசூலை சகோதரர் S. அஹமது ராவுத்தார் (செல்லவாப்பா) அவர்களின் தலைமையின் கீழ் செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.
துபாய் கமிட்டி
1) M.அஹமது அன்சாரி
2) A.ஆசாத்காமில்
3) F.நாவஸ்கான்
சார்ஜா கமிட்டி
1) H.தாவுதுகான்
2) M.சாகுல் ஹமீது
3) R.அலாவுதீன்
4) A.ஆரிப்பின்
ஆகியோர்கள் அடங்கிய பித்ரா வசூல் குழு அமைக்கப்பட்டது, இக்குழுவை பித்ரா வசூல் செய்து தரும்படி கூட்டத்தில் ஒருமனதாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
நமதூர் வாசிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் பித்ரா தொகையினை வழங்கி நல்லாதரவு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி
No comments:
Post a Comment