தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, July 30

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!


















ஜுலை 30: டில்லியிலிருந்து சென்னை ‌நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 50 பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த ‌‌ரயில்‌ எஸ் -11 கோச்சில் இருந்த மொத்தம் 72 பேரில் இன்னும் சிலர் தீயில் சிக்கி இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

டில்லியிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 04:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர். 

நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்‌கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார். 

21 பேர் மீட்பு: தூங்கும் வசதி கொண்ட இந்த 2ம் வகுப்பு பெட்டியிலிருந்து இதுவரை 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் நெல்லூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பெட்டியில் 72 பயணிகள் இருந்தனர்.

ஆந்திர முதல்வர் விரைகிறார்: சம்பவம் நடந்த இடத்திற்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவசரமாக விரைந்துள்ளார். விபத்து ஏற்பட்ட விவரம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து நேரில் விசாரித்து காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். சென்னைக்கு வந்து பின்னர் நெல்லூர் கிளம்புகிறார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் ஒரு ரயில் அனுப்பி வைக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here