ஸ்பெக்ட்ரம் மீது வரி விதிக்கப்பட்டால் செல்போன் கட்டணம் உயரும்... - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 3

ஸ்பெக்ட்ரம் மீது வரி விதிக்கப்பட்டால் செல்போன் கட்டணம் உயரும்...


மார்ச்.3- இந்தியாவில் தற்போது செல்போன் லோக்கல் கட்டணம் ஒரு நொடிக்கு ஒரு பைசாவாகவும் நீண்ட தூர கட்டணம் ஒரு நிமிடத்திற்கு 50 பைசாகவும் உள்ளது. உலகிலேயே மிகவும் குறைவாக செல்போன் கட்டணம் வசூலிக்கப்படுவது இந்தியாவில்தான்.
ஆப்பிரிக்காவில் கூட ஒரு நிமிடத்திற்கு ரூ.3.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு கட்டணம் குறைவாக இருப்பதால்தான் அனைவரும் அதிக நேரம் செல்போன் பேச முடிகிறது.
இந்நிலையில் செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் மீதான வரி விதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்பெக்ட்ரத்திற்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருந்தால் தனியார் நிறுவனங்கள் செல்போன் கட்டணத்தை உயர்த்தி விடும்.
இதுபற்றி ஏர்டெல் நிறுவன நிர்வாகி சுனில் மிட்டல் கூறும்போது, மத்திய அரசு தனியார் செல்போன் நிறுவனங்களிடம் இருந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு தனியாக பணம் வசூலித்தால், செல்போன் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வாடிக்கையாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
தனியார் செல்போன் நிறுவனங்கள் தொலை தொடர்பு சாதன விலை உயர்வு காரணமாக ஏற்கனவே 20 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியது. மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும்போது செல்போன் கட்டணம் மிகவும் குறைவுதான்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here