மார்ச். 5- உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் மட்டும் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்கி மார்ச் 3-ந்தேதிவரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
5 மாநிலங்களிலும் 60 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 5 மாநிலங்களிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. 4 மணி நேரத்தில் முடிவுகள் வெளி வரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு கருதப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment