
3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் 5-வது 'லீக்' ஆட்டம் அடிலெய்டில் இன்று காலை 8.50 மணிக்கு தொடங்கியது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடுகின்றன.
இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சுழற்சி முறை அடிப்படையில் ஷேவாக், ஜாகீர்கானுக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக தெண்டுல்கர், இர்பான் பதான் இடம் பெற்றனர். இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. தம்மிக பிரசாத்துக்கு பதிலாக ஹெராத் சேர்க்கப்பட்டார்.
இலங்கை அணி கேப்டன் ஜெயவர்த்தனே 'டாஸ்' வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. வினய்குமார் தனது ஓவரின் 2-வது பந்தில் உபுல் தரங்காவை அவுட் செய்தார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் டோனியிடம் 'கேட்ச்' கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதேபோல் மற்றொரு தொடக்க வீரர் தில்சான் விக்கெட்டை இர்பான் பதான் கைப்பற்றினார். அவர் 16 ரன்னில் வெளியேறினார். 7.1 ஓவரில் இலங்கை அணி 28 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது.
3-வது விக்கெட்டான சங்ககாரா - சண்டிமால் ஜோடி பொறுமையுடன் ஆடியது. நிதானமாக ஆடிய சங்ககாரா 31 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து சண்டிமாலுடன் ஜெயவர்தனே ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக ஆடிய ஜெயவர்தனே 43 ரன்கள் எடுத்திருந்த போது வினய்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிவந்த சண்டிமால் 81 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி 38 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.
மேத்யூஸ் 1 ரன்னும் பெரேரா 3 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

No comments:
Post a Comment